1. A, B, C என்ற மூவர் வயதின் பெருக்குத் தொகை 72. அவர்களில் Aவை விட Bயின் வயது ஒன்று அதிகம். Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?
2. ராமு, சோமுவிடம் 7:9 என்ற விகிதத்தில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமுவின் தாத்தா இருவரிடமும் மேலும் ஐந்து சாக்லேட்டுக்களைக் கொடுத்தார். இப்போது அவை 4:5 என்ற விகிதத்தில் மாறிவிட்டன. ஒவ்வொருவரிடமும் முதலில் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை என்ன?
3. கூடையில் சில மாம்பழங்கள் இருந்தன. சோமு அதில் சம பாதியையும் ஒரு அரைப்பழத்தையும் மூத்த மகனுக்குக் கொடுத்தார். மீதமிருந்த பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் இரண்டாவது மகனுக்குக் கொடுத்தார். எஞ்சிய பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் மூன்றாவது மகனுக்குக் கொடுத்தார். இறுதியில் கூடையில் எட்டு பழங்கள் மீதமிருந்தன. அப்படியானால் கூடையில் இருந்த பழங்கள் எத்தனை? அவற்றை சோமு எப்படிப் பங்கு போட்டிருப்பார்?
4. 105263157894736842 - இந்த எண்ணை இரண்டால் பெருக்கினால் வரும் விடையின் அதிசயம் என்ன?
5. 7, 5, 8, 4, 9, 3, ...., .... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த்
விடைகள்1. A x B x C = 72
C-யின் வயது ஆறு வருடங்கள் கழித்து = 12
தற்போது = 12 - 6 = 6
A x B x C = 72
A x B = 72/C = 72/6 = 12
A x B = 12
Aயைவிட Bயின் வயது ஒன்று அதிகம் என்றால், A = 3; B = 4; C = 6
3 x 4 x 6 = 72;
2. ராமு. சோமுவிடம் இருந்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 7 : 9
தாத்தா கொடுத்தது = 5
7x+5; 9x+5 = 4:5
5(7x+5) = 4(9x+5)
35x+25 = 36x+20
36x-35x = 25-20
x = 5
ராமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை = 7 x 5 = 35; சோமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை 9 x 5 = 45.
3. கூடையில் மீதமிருந்த பழங்கள் = 8.
மூன்றாம் மகனுக்குப் பங்கு பிரிக்கும்முன் இதுவும் அரைப்பழமும் சேர்ந்தால் ஒரு பாதி. அதாவது 8 + 1/2 = 8 1/2 பழங்கள் ஒரு பாதிப் பங்கு. அப்படியானால் முழுப்பங்கு = 2 x 8 1/2 = 17. இதில் பாதியும் கூடுதலாக ஒரு அரைப்பழமும் மூன்றாம் மகனுக்குக் கொடுத்தார். அதாவது 17/2 + 1/2 = 8 1/2 + 1/2 = 9.
இதே முறைப்படி இரண்டாம் மகனுக்குக் கொடுத்தது = 17 1/2 + 1/2 = 18
முதல் மகனுக்குக் கொடுத்தது = 35 1/2 + 1/2 = 36
கூடையில் இருந்த மொத்தப் பழங்கள் = 36 + 18 + 9 + 8 = 71
4. 105263157894736842 x 2 = 2105263157894736842. இறுதி இலக்கமான எண் "2" வரிசையின் தொடக்கத்துக்குச் செல்ல, மற்ற எண்கள் அப்படியே இருக்கின்றன என்பதே இதிலுள்ள அதிசயம்.
5. வரிசை 7, 8, 9 என ஏறுவரிசையிலும், 5, 4, 3 என இறங்கு வரிசையிலும் அமைந்துள்ளது. ஆகவே வரிசைப்படி அடுத்துவர வேண்டிய எண் 10.