பாசிப்பருப்பு புட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 300 கிராம்
தேங்காய் மூடி - 1
முந்திரிப்பருப்பு - 12
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 100 அல்லது 150 கிராம்

செய்முறை
பாசிப்பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். நெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் சமமாக மாவைப் பரப்பி ஆவியில் 10 - 15 நிமிடம் வேகவைக்கவும். வெந்ததும் சிறிது ஆறவைக்கவும். ஆறியவுடன் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் நெய் முந்திரியை வறுத்துக்கொண்டு, உதிர்த்ததைக் கொட்டிக் கிளறவும். பொலபொலவென்று உதிரியானதும் தேங்காய்த்துருவல் சேர்த்து ஐந்து நிமிடம் உதிர்க்கவும். வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். (தக்காளிப் பதம்) பாகை இறக்கி உதிர்த்ததைக் கொட்டிக் கிளறவும். கிளறும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்க்கவும். ஏலப்பொடி, முந்திரிப்பருப்பைப் போடவும். ஆறியதும் உதிரியாக ஆகிவிடும். பூப்போல இருக்கும். ருசியும் மணமும் மனதை அள்ளும்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com