நாகபஞ்சமி லாடு
தேவையான பொருட்கள்:
கோதுமை - 3 கப்
அரிசி - 1 கப்
நெய் - 1/2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
கசகசா - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 2 தேக்கரண்டி
வெல்லம் - 4 கப்

செய்முறை:
கோதுமை, அரிசி, பருப்புகளை சிவக்க வறுத்துப் பொடியாக சலித்து வைக்கவும்.
கசகசாவையும் சிவக்க வறுத்துப் பொடியாக்கிப் போடவும்.
தேங்காய் துருவலை சிவக்க வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப் பொடி போடவும்.
நெய்யைச் சுட வைத்து ஊற்றி வெல்லத்தை பாகு வைக்கவும்.
பாகு உருட்டு பதம் வந்தவுடன் மாவுக் கலவையைப் போட்டு உருண்டை பிடிக்கவும்.
மிகச் சுவையான லாடு இது.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com