TNF கனெக்டிகட்: அன்னையர் தினவிழா
மே 13 2017 அன்று, கனெக்டிகட் மாநிலத் தமிழ்நாடு அறக்கட்டளை அன்னையர் தின விழாவைக் கொண்டாடியது. இதில் கனெக்டிகட் நடனப் பள்ளிகள் இணைந்து இந்த விழாவை 'நாட்டிய மாலா' என்ற தலைப்பில் வழங்கினர். புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம் ஆகியவற்றோடு தொடங்கி, பரதநாட்டியம், குச்சுபுடி, மோகினியாட்டம், கைகொட்டுக்களி எனப் பலவகை நடனங்களும் வழங்கப்பட்டன.

அறக்கட்டளைத் தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மாணவர் திட்டம் மூலம் இந்தியாவுக்குச் சென்று பள்ளிகளில் பணியாற்றிய பிரகதீஷ் விழாவின் அறிவிப்பாளராக இருந்தார். கனெக்டிகட் மாநிலத்தில் பல தொண்டுகள் செய்துவரும் மூன்று அன்னையர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் திரளாக வந்து அறக்கட்டளைக்கு உதவினர்.

உதவ விரும்புவோர் நன்கொடை அளிக்க

ஒரு குழந்தையை ஒரு வருடம் தத்தெடுக்க நூறு டாலர் அளிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய மின்னஞ்சல் அனுப்புக: tnfconn@gmail.com

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com