NETS: சித்திரைத் திருவிழா
மே 13 2017 அன்று மாசசூஸட்ஸ், வேலண்ட் நடுநிலைப் பள்ளியில் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சித்திரை விழாவையும், அன்னையர் தினத்தையும் கொண்டாடியது. மங்கையர் கைவண்ணத்தில் கோலப் போட்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்தது உறியடித்தல் போட்டி. இதோடு குழந்தைகளுக்கான அறிவியல் தேனீ, கணிதத் தேனீ போட்டிகள் நடத்தப்பட்டன.

திருமதி. சுஜா மெய்யப்பனின் மாணவி சேதனா அய்யகாரி மற்றும் திருமதி. வீணா தூளியின் மாணவி வர்ஷிணி ஆறுமுகம் ஆகிய இருவரின் நாட்டியம் அடுத்து அரங்கேறியது. தொடர்ந்து லெக்சிங்டன் சிசு பாரதியின் 'தெனாலி ராமன்', க்ரிஸ்ப் ப்ரொடக்‌ஷனின் 'நவீன சரஸ்வதி சபதம்' ஆகியவை மேடையேறின. சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர் டூயட் போட்டிகளுக்குப் பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

விழாவின் முக்கிய அம்சமான இன்னிசை விருந்தில் பின்னணிப் பாடகர் ஹரிஹரசுதன், விஜய் டிவி புகழ் பாரீதா, ஸியாத், கலக்கப்போவது யாரு புகழ் நவீன் மற்றும் ஜெயா டிவி புகழ் அனுஷா அரங்கத்தை அதிரவைத்தனர். பாடல் தேர்வு, பாடிய விதம், ஒவ்வொரு பாடலுக்கு முன் மிமிகிரி செய்தது எல்லாமே அருமை.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com