சான் டியகோ: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 19, 2017 அன்று சான் டியகோ நகரில், சான் டியகோ தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.

இளஞ்சிறார் இந்நிகழ்வில் திரைப்படம் கலக்காத, திரைப் பாடல்கள் ஊடுருவாத ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட நடத்தியது இதன் தனிச்சிறப்பு. மழலையரின் இனிமையான பாடல், நடனங்களில் தொடங்கி, அடிப்படை நிலை வகுப்பினரின் நாடகங்கள், மாறுவேடம் மற்றும் அற்புதமான ஒயிலாட்டம் இடைவேளை வரை நடந்தது.

பிற்பகுதியில், கேள்வி கேட்டவரைத் திணறவைத்த திருக்குறள் போட்டி மனதைக் கவர்ந்தது. தலைமை தாங்கிச் சிறப்பித்த திரு. கார்த்திக் முரளிதரன், திரு. வேணு பிரபாகர் ஆகியோரின் சிறப்புரைகள் உற்சாகமூட்டின. தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ராம்பிரபு ராமசாமி,
சான் டியகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com