2017 மே 27ம் தேதி முதல், மே 31ம் தேதி வரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப்பகுதி ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.
"கோபம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள பிடியில்லாத கத்தியைப் போன்றது. அது கோபத்திற்கு ஆளாகுபவர், கோபப்படுபவர் இருவருக்குமே தீங்கு விளைவிக்கும். அப்படிப்பட்ட இயல்பை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார் அம்மா. ஜூன், ஜூலை மாதங்களில் அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
ஊர் | தேதி | சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி | 05.31 - 06.06 | லாஸ் ஏஞ்சலஸ் | 06.08 - 06.10 | சான்ட ஃபே | 06.12 - 06.15 | டாலஸ் | 06.17 - 06.18 | சிகாகோ | 06.20 - 06.22 | அட்லாண்டா | 06.24 - 06.25 | நியு ஜெர்சி | 06.27 - 06.29 | மான்செஸ்டர் | 07.01 - 07.02 | வாஷிங்டன் டி.சி. | 07.04 - 07.05 | டொரன்டோ, கனடா | 07.07 - 07.10 |
இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மா தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். டொரன்டோவில் ஆன்மீக முகாம் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர், சான் ரமோன், கலிஃபோர்னியா |