தெரியுமா?: கண்ணப்பன் கலை அருங்காட்சியகம்
2017 மே மாதம் 26ம் நாள் டெக்சஸ் பியர்லாண்டில் கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் (Kannappan Art Museums) திறந்து வைக்கப்பட்டது. திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் வரவேற்புரை நல்கினார். பியர்லாண்டின் மேதகு மேயர் டாம் ரீட் இந்த முயற்சியின் பின்னணியைக் கூறும் பாராட்டுச் சான்றிதழைக் கண்ணப்பனுக்கு வழங்கினார்.

ஹூஸ்டனில் உள்ள துணைக் கான்சல் ஜெனரல் மேதகு சுரேந்திர ஆதனா, கண்ணப்பனின் சமுதாய சேவைகளைப் புகழ்ந்துரைத்தார். பரதநாட்டியத்தின் ஆயிரமாண்டுப் பாரம்பரியத்தையும் தமிழக நடனங்களையும் குறித்து டாக்டர். ரத்னா குமார் பேசினார். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். தமிழ்நாட்டின் நாட்டரசன்கோட்டையில் 1944ல் தனது பாட்டனார் கட்டிய மாளிகையின் புகைப்படங்கள் குறித்து திரு. எஸ். நாராயணன் பேசினார். திட்டமிடப்பட்டுள்ள, சீனா மற்றும் இந்தியா உட்பட்ட உலக நகரங்கள் அருங்காட்சியகம் குறித்து நிர்வாக இயக்குனர் திரு. ஹெய்டி வீஸ் உரையாற்றினார்.

அருங்காட்சியக முகவரி:


அருங்காட்சியக நேரம்:
செவ்வாய்: மாலை 5:30 - 7:30
வியாழன்: காலை 9 - மதியம் 2
ஞாயிறு: மதியம் 12 - மாலை 4

பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்கூட்டியே heidilodc@sbcglobal.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் காலநிர்ணயம் செய்துகொள்ளலாம்.

மேலதிகத் தகவலுக்கு:
சாம் கண்ணப்பன் - 713-724-4399 (M)

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com