கணிதப்புதிர்கள்
1) 1, 9, 125, 2401, ...... அடுத்து வரிசையில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2) ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 40 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 94 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?

3) ஒரு வியாபாரி ஒரு புளி மூட்டையை விலை கொடுத்து வாங்கினான். அவன் வாங்கியவுடன் அதன் விலை 30% அதிகரித்து விட்டது. ஆனால், அவன் விற்கும் போது அதன் விலை 30% சரிந்து விட்டது. அவனுக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

4) இரண்டு கூடைகளில் மாம்பழங்கள் இருந்தன. முதல் கூடையில் இருந்ததை விட இரண்டாவது கூடையில் 16 பழங்கள் குறைவு. இரண்டாவது கூடையில் இருந்ததைவிட அரைப்பங்கு அதிகமாக முதல் கூடையில் பழங்கள் இருந்தன என்றால் இரண்டு கூடைகளிலும் இருந்த மாம்பழங்களின் எண்ணிக்கை என்ன?

5) ராமு சைக்கிளில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தான். ஐந்தில் ஒரு பங்கு தூரத்தை அவன் கடந்த போது மணி 9.02 ஆக இருந்தது. பாதி தூரத்தைக் கடந்ததும் அவன் மணி பார்த்த போது 9.50 ஆகி இருந்தது. அவன் கோயிலை எத்தனை மணிக்கு அடைவான்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com