பிளானெட் VU குழுமத்தின் முதுநிலை உபதலைவராகவும் தலைமை விற்பனை அதிகாரியாகவும் திரு. ஹரி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீனிவாஸ் B4U US Inc நிறுவனத்தில் இதற்கு முன்னர் பணி புரிந்தார். வட மற்றும் தென் அமெரிக்காவில் B4Uவின் செயல்பாடுகளுக்குப் பொறுப் பேற்றிருந்தார்.
இது பற்றி ஸ்டூவர்ட் W. ரோஸ் (CEO) கூறும் போது, ஹரி தனது கடுமையான உழைப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் நல்ல தொடர்பு களை உருவாக்குவார் என்றும், அதன் மூலம் பிளானெட் VU குழுமத்தின் இணைய நெறிமுறை தொலைக்காட்சி தளத்தின் (Internet Protocol Television Platform) வளர்ச்சிக்கு மேலும் வழிவகுப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
பிளானெட் VU குழுமம் டொராண்டோ நகரில் ஜனவரி 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது. www.planetvu.com என்ற இணையதளத்தின் மூலம் தற்பொழுது தெற்காசிய நிகழ்வுகளின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது இந்நிறுவனம். அடிப்படையில் சந்தைப் படுத்துதலின் மீது மட்டுமே கவனம் செலுத்தினாலும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் தற்போது ஆர்வம் கொண்டுள்ளது. தொடர்பு கொள்ள: Stuart W. Ross, PlanetVU Corporation, 416.601.2270 ext. 221. |