தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு - இரண்டு கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம் வெல்லத்தூள் - 1 1/4 கிண்ணம் ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி நெய் - 1/4 கிண்ணம் முந்திரிப்பருப்பு (பொடியாக உடைத்தது) - 1 மேசைக்கரண்டி
செய்முறை கேழ்வரகு மாவில் வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல், நெய் விட்டுப் பிசையவும். சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசையலாம். ஒரு உருண்டை எடுத்து தோசைக்கல்லில் வைத்துக் கையால் மெல்லியதாகத் தட்டிச் சுற்றிலும் நெய்விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும். மாவிலேயே முந்திரிப்பருப்பைப் போட்டு பிசைந்தும் தட்டலாம். தட்டியவுடன் மேலாகப் போட்டுக் கரண்டியால் அழுத்தியும் செய்யலாம். இது மிகவும் சுவையான ஓர் அடை. மிகவும் ருசியானது, உடம்புக்கும் நல்லது.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |