கேழ்வரகுமேதி அடை
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 2 கிண்ணம்
வெந்தயக் கீரை - 1 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - இரண்டு மேசைக்கரண்டி
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
கேழ்வரகு மாவில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய வெந்தயக் கீரை, சீரகப்பொடி, நறுக்கிய மிளகாய், மிளகாய்த்தூள், தேங்காய்த்துருவல், உப்பு, நெய்விட்டுத் தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதைச் சப்பாத்திபோல இட்டு தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக எடுத்துச் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com