TNF: மத்திய ஃப்ளோரிடா நிகழ்ச்சி
ஏப்ரல் 9, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, மத்திய ஃப்ளோரிடா கிளை சார்பாக, வெனிஸ் நகரில், TNF வெள்ள நிவாரணப் பணிகள், ABC கல்வித் திட்டம் போன்றவற்றைப் பற்றி TNF துணைத் தலைவர் திரு. சோமலெ. சோமசுந்தரம் விரிவாகப் பேசினார். மேனாள் தலைவர்கள் திரு. தீனன், திரு. மோகனம், திரு. மாணிக்கம் உட்படப் பலர் பங்கேற்றனர். கிளைச்செயலர் திருமதி. கல்பனா குமார் நிகழ்ச்சியைச் சுவைபட ஒருங்கிணைத்து வழங்கினார். திருமதி. பத்மா மோகனம் 'அன்பாலயம்' மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையைக் குடும்பத்தின் சார்பாக அறிவித்தார்

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com