TNF 43வது மாநாடு
2017 மே 27-28 தேதிகளில், தமிழ்நாடு அறக்கட்டளையின் 43வது மாநாடு கொலம்பஸ், ஒஹையோவில் நடக்கவுள்ளது. இதில், இசைமேதை கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கொலம்பஸ்

தமிழர்கள் 'சங்கம் முதல் சிலிகான் வேல்லிவரை' என்ற இசை நடன விருந்தை வழங்குவார்கள். மாலைப்பொழுதில் இந்தியாவிலிருந்து வரும் சூப்பர் சிங்கர்ஸ்களுடன் மெல்லிசை விருந்து. 'இன்றைய வாழ்க்கைச் சூழலில்

மனிதாபிமானம் வளர்கிறதா, தளர்கிறதா?' என்ற தலைப்பில் மயக்க மருத்துவர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமையில் சூடான பட்டிமன்றம்.

25க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறப்பு இளையோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். TNF மூலம் தமிழகத்தில் தன்னார்வச் சேவை செய்த சீதா நடேசன் (ஆஸ்டின்), உர்வி ஐயர்

(அட்லாண்டா), ஸ்ரீராம் மற்றும் கிருஷ்ணன் (இண்டியானாபொலீஸ்) ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்வார்கள். தமிழக கிராமப்புறங்களில் பாம்புக்கடியால் அவதியுறுவோருக்கு உதவும் திட்டத்தைப் பற்றி

விரிகுடாப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கண்ணப்பன் பேசுவார். சமூகசேவை மட்டுமின்றி, விளையாட்டு, போட்டிகள் எனக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர் வரை அனைவரையும் கவரும் விதத்தில் திரு. ஆனந்த் பத்மநாபன்

தலைமையில் இளையோர் மாநாடு உருவாகி வருகிறது.

கொலம்பஸ் மாநாட்டில் திரட்டப்பெறும் நிதி தமிழகக் கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பின் தங்கிய மாணவர்களின் கல்விக்கு TNF-ABC திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்படும். சென்னையிலிருந்து TNF தலைவர் திரு.

ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ். அவர்கள் வருகிறார். TNF வெள்ள நிவாரணத் திட்டங்கள் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்துகொள்வார்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் திரு. மணிவண்ணன் பெரியகருப்பன், அறிஞர் தமிழண்ணல் அவர்களின் மகன். கொலம்பஸ் தமிழ்ச் சங்கத் தலைவராகவும், அமெரிக்கத் தமிழ் அகாதமித் தலைவராகவும் சேவை

செய்தவர். தற்போது தமிழ்நாடு அறக்கட்டளையின் இயக்குநராக உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு: www.TNFUSA.org

குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ளுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள்: www.TNFconvention.org

மின்னஞ்சல்: tnfconvention@gmail.com
தொலைபேசி: 614-923-3868

தகவல்: முருகன் கண்ணன்

© TamilOnline.com