மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2017 மே 27ம் தேதி முதல், ஜூலை 10ம் தேதி வரை, "அம்மா" ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார். அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

ஊர்தேதி
சியாடல்05.27 - 05.29
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி05.31 - 06.06
லாஸ் ஏஞ்சலஸ்06.08 - 06.10
சான்ட ஃபே06.12 - 06.15
டாலஸ்06.17 - 06.18
சிகாகோ06.20 - 06.22
அட்லாண்டா06.24 - 06.25
நியூ ஜெர்சி06.27 - 06.29
மேன்செஸ்டர்07.01 - 07.02
வாஷிங்டன் டி.சி.07.04 - 07.05
டொரன்டோ, கனடா07.07 - 07.10


இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org
மேலும் விபரங்களுக்கு: வலைமனை: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com