VisitorsCoverage வழங்கும் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டம்
விசிட்டர்ஸ் கவரேஜ் நிறுவனம் ChoiceAmerica என்ற புத்தம் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டத்தை அமெரிக்கா வருவோரின் தேவைக்கேற்பப் பல சிறந்த அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக இங்கு வரும் பெற்றோருக்கும் முதியோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “இதிலிருக்கும் பல அனுகூலங்கள் இதற்குமுன் ஒரே பயணியர் காப்பீட்டுப் பாலிசியில் இருந்ததில்லை என்பதனால் இது காப்பீட்டுத் துறையிலேயே முதலாவதாகக் கருதப்படுகிறது” என்கிறார் விசிட்டர்ஸ் கவரேஜ் CEO திரு. ராஜீவ் ஸ்ரீவாஸ்தவா. மேலும், "பன்னாட்டுப் பயணிகளின் தேவைக்கேற்ப மிகச்சிறந்த தீர்வுகளை நாங்கள் கொடுக்கிறோம் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சான்று” என்கிறார்.

எந்தக் காப்பீட்டுத் திட்டமும் முன்னரே இருக்கும் நோய்களுக்குக் காப்பீடு தருவதில்லை. ஆனால், சாய்ஸ் அமெரிக்கா திட்டம் உங்கள் விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட அளவுக்கு அடிப்படைக் காப்பீட்டை முன்னர் இருக்கும் நோய்களுக்கும் தரும். சாகச விளையாட்டுக்கள் மற்றும் கேளிக்கைப் பூங்காக்களில் ஏற்படும் காயங்களுக்கும் கவரேஜ் பெறலாம்.

ஒருவர் அமெரிக்கக் குடிமகனாக அல்லது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இல்லாவிட்டாலும், அவர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு இதன்மூலம் கவரேஜ் பெறமுடியும். ஒருவேளை அவர் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படுமானால் அதற்கென 'Border Security Coverage' இந்தப் பாலிசியில் பெறமுடியும்.

அதுவுமின்றி பயணி தனது பாஸ்போர்ட் உட்பட்ட பயண ஆவணங்களை இழந்துவிடும் பட்சத்தில், இழப்புச் சான்றிதழ் கொடுத்து அவர் அவற்றை மீளப் பெறுவதற்கான செலவினம் கிடைக்கவும் கவரேஜ் உள்ளது.

இத்தனை வகையான அனுகூலங்களைக் கொண்ட பயணியர் பாலிசியை அமெரிக்காவுக்கு வரும் உங்கள் பெற்றோர் அல்லது உறவினருக்குப் பெற நினைத்தால் பார்க்கவேண்டிய இடம்: www.VisitorsCoverage.com

இந்த வலைத்தளத்தில் காப்பீட்டுப் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்து, மிக வசீகரமான பிரீமியத்தில் இந்த அற்புதமான பாலிசியை ஆன்லைனில் வாங்க வசதி உள்ளது.

தொலைபேசி எண்: 1-866-384-9104

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com