விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் சுருதி ஸ்வர லயா என்ற கலைக்கல்விப் பள்ளியை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளாகக் கலைச்சேவை புரிந்துவரும் திருமதி. அனுராதா சுரேஷ் அவர்களுக்கு இவ்வாண்டின் 'பேரா. T.R. சுப்ரமண்யம் விருது' வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பிரபல க்ளீவ்லாண்டு தியாகராஜ ஆராதனை அமைப்பு வழங்கியுள்ளது. தவிர இவ்வாண்டு ஏப்ரல் மாதம் விரிகுடாப்பகுதி தியாகராஜ ஆராதனை அமைப்பும் 'சாஸ்திரீய சங்கீத புரஸ்கார்' விருதை வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
வட அமெரிக்காவில் கர்நாடக சங்கீதத்தைப் பரப்ப இடையறாது உழைக்கும் சிறந்த ஆசிரியருக்கு T.R. சுப்ரமண்யம் விருது வழங்கப்படுகிறது. அனுராதாவின் மாணவர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல மதிப்புமிக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
பெர்க்கலி பல்கலையில் தொழில்நுணுக்கப் பணி வாய்ப்புக் கல்வி பயிற்றுவிக்கும் அனு சுரேஷ், ஃப்ரீமான்ட் கலாசார கலை கவுன்சிலின் நிர்வாக உறுப்பினரும் ஆவார். இவர் சிலிக்கான் ஆந்திரா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேவை மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இயக்குனராகவும் இருக்கிறார்.
அனுராதா சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
செய்திக்குறிப்பிலிருந்து |