பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி
இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பிகளுள் ஓருவரும் ஹுஸேன் சாகர் புத்தர், நியூ யார்க் சித்திவிநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல பணிகளைச் செய்தவருமான சிற்பி சட்டநாத முத்தையா ஸ்தபதி என்னும் பதம்ஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி (85) சென்னையில் காலமானார். தேவகோட்டை அருகே உள்ள எழுவங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட கணபதி ஸ்தபதி, உழைப்பால் உயர்ந்தவர். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், கிரந்தம், சிற்ப சாஸ்திரம், ஜோதிடம் என பலவற்றிலும் தேர்ந்தவர். காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்களால் அடையாளம் காணப்பட்டவர். அவரது ஆக்ஞைப்படி காசி, காஞ்சி, ஹரித்துவார், அலஹாபாத், ஹைதராபாத், சதாரா, அமெரிக்கா எனப் பல இடங்களிலும் புகழ்பெற்ற பல ஆலயங்களை நிர்மாணித்தார். சில்பகலாநிதி, சில்பகலா வித்வன்மணி, சிற்ப சாஸ்திர ரத்னாகரா, சில்ப கலாவாரிதி போன்ற பட்டங்களைப் பெற்ற கணபதி ஸ்தபதி, ஆந்திர அரசின் தலைமை ஸ்தபதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். பல சிற்பிகளை உருவாக்கிய பெருமை உடையவர். இவரது மகன்களான சங்கர ஸ்தபதியும், ஜயேந்திர ஸ்தபதியும் புகழ்பெற்ற ஸ்தபதிகளே!

இவர் தென்றலுக்கு அளித்த சுவையான நேர்காணலை இங்கே வாசிக்கலாம்

மஹாசிற்பிக்குத் தென்றலின் அஞ்சலி.



© TamilOnline.com