தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 1 கப் பயத்தம் பருப்பு - 1 கப் ரவை - 1/2 கப் அரிசி - 1/2 கப் வெல்லம் - 4 கப் தேங்காய் - 1/2 கப் சில்லு சில்லாய் நறுக்கியது ஏலக்காய் - 6 சுக்குப்பொடி - 1 மேசைக்கரண்டி வேர்க்கடலை - 1/2 கப் நெய் - 1/4 கப்
செய்முறை: கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, அரிசி ரவை ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அவற்றை நைசாக அரைத்து சலித்து எடுக்கவும். தேங்காயையும், வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து அந்த மாவுடன் சேர்க்கவும். சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி ஆகிய வற்றையும் அதில் சேர்க்கவும். பிறகு நெய்யை நன்றாக காய்ச்சி அந்த மாவில் ஊற்றவும். இதற்கிடையில் வெல்லத்தை நல்ல முற்றின பதமாக பாகுவைத்துக் கொண்டு மாவை இரண்டு பாகமாய் பிரித்து வைத்து பாகை அதன் மேல் ஊற்றி சூடு ஆறுவதற்குள் உருண்டைகளாக பிடிக்கவும். ஒரு பகுதி மாவு பிறகு மறுபாதி பாகு ஊற்றி பிடிக்க வேண்டும். மொத்தமாக ஊற்றிப் பிடிக்க முடியாது பொலபொலவென்று உதிர்ந்துவிடும். இது மிக சுவையான லாடு.
தங்கம் ராமசாமி |