ஃபிப்ரவரி 11, 2017 அன்று நன்கொடை திரட்டும் விழா ஒன்றைத் தமிழ்நாடு அறக்கட்டளையின் தெற்கு ஃப்ளோரிடா பிரிவு, சிறப்பாக நடத்தியது.
ஃபோர்ட் லாடரேல் நகரில் முதன்முறையாக நடக்கும் கொடைவிழா எனினும், மிக உற்சாகமாக மக்கள் அளித்த உதவியால் இரண்டு குக்கிராமப் பஞ்சாயத்துப் பள்ளிகளில் ABC Project நடத்த ஏற்பாடுகள் செய்கிறது தமிழ்நாடு அறக்கட்டளை. ஆண்டுதோறும் இவ்விழாவை நடத்தி மேலும் பல பள்ளிகளில் இந்த நற்பணியை ஆற்றுவோம் என்று உறுதி கூறுகிறார் கிளையின் தலைவி திருமதி. மாலதி பழனியப்பா.
அறக்கட்டளையின் ABC திட்டம், தமிழ்நாட்டில் கல்விகற்கச் சரியான அமைப்பின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கானது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் முதல் தெற்கே தூத்துக்குடி மாவட்டம்வரை ஐம்பதுக்கு மேல் குக்கிராமப் பள்ளிகளில் இத்திட்டம் நடத்தப்படுகிறது.
டாக்டர் ராம்மோஹன், ஃப்ளோரிடா |