மார்ச் 12, 2017 அன்று சர்வதேச மகளிர் தினத்தைச் சிகாகோ TNF கிளை வித்தியாசமாகக் கொண்டாடியது. தமிழ் பெண் மக்களும், ஆண்களும், ஏழு மணி நேரத்திற்குத் தொடர்ந்து மற்றவர்களின் துணிகளைத் தைத்தும், சிறு தையல் வேலைகளைச் செய்தும், இஸ்திரி செய்தும், 5000 டாலர்கள் சேர்த்தனர். “ஆடல், பாடல் எனக் கேளிக்கை இல்லாமல் உழைப்பின் மூலம் மட்டுமே தமிழகப் பெண்கள் நலத்திற்கு நிதி திரட்டியதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் கிளையின் செயல்தலைவர் வீரா வேணுகோபால். விழாவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய லக்ஷ்மி சீனிவாசன், அறக்கட்டளையின் சென்னை மையத்தில் பயன்பெறும் சென்னைவாழ் பின்தங்கிய பெண்களைப் பார்த்தபோது அவர்களுக்கு உதவும் எண்ணம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவே இந்தத் தையல் திருவிழா என்றும் கூறினார். உங்கள் ஊரிலும் “தையல்” விழா நடத்தலாமே!
மேலும் விவரங்களுக்கு: 630-452-2628
செய்திக்குறிப்பிலிருந்து |