GTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
மே 4, 2017 அன்று உலகத்தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு (Global Tamil Entrepreneurs Network - GTEN) ஒன்றை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (American Tamil Entrepreneurs Association - ATEA) ஏற்பாடு செய்துள்ளது. மே 5, 6 தேதிகளில் TiECon சிலிக்கான் வேல்லியில் நடக்கவிருப்பதை ஒட்டி இது ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் தொழில்முனைவோர், முதலீட்டாளர், சிந்தனை முன்னோடிகள், புத்தாக்கம் செய்வோர் ஆகியோர் சந்திக்கவும், கை பிணைக்கவும், கற்கவும், கருத்துப் பரிமாற்றம் செய்யவும் இந்தக் கூடல் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்.

இந்த அரைநாள் கூடலில் சிறப்புச் சொற்பொழிவுகள், குழு விவாதங்கள், வழிகாட்டிகளை அறிதல் ஆகியவை இடம்பெறும். ஒருவரை ஒருவர் அறிவதற்கான informal networking நேரமும் உண்டு. ATEA மற்றும் TiE உறுப்பினர்களுக்கு இந்தச் சந்திப்பில் பங்கேற்கக் கட்டணச் சலுகை உண்டு.

சிலிக்கான் வேல்லி ATEA ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை நடத்திவருகிறது. இவற்றில் சுஜா சந்திரசேகர் (CIO of Kimberly Clark), மைக்கல் சூசை (நிறுவனர் CEO, நெட்ஸ்கேலர்), ரவி ரவிச்சந்திரன் (Sales Force) ஆகியோர் அண்மையில் உரையாற்றியவர்களில் சிலர்.

TiECON மற்றும் GTEN இரண்டிலும் பங்கேற்க விரும்புவோர் பார்க்க: bit.ly/TiEcon-ATEA.

தொடர்புக்கு:
நரசிம்மன் கஸ்தூரி - 650 793-0056 (for sponsorship and other opportunities)
பத்து கோவிந்தராஜன் - 408-940-2281 (for registration).

ATEA குறித்து மேலும் தகவலுக்கு: www.ateausa.org

நரசிம்மன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com