ஏப்ரல் 29-30 நாட்களில் சிகாகோ நகரில் இருக்கும் அரோரா ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் பகவத் ராமானுஜரின் 1000வது திருநட்சத்திரத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகம பூஜைகள், யக்ஞம், நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. விழாவின் ஒரு பகுதியாக 'ஏற்றம் தந்த எதிராஜர்' என்ற சிறப்பு நாடகம் ஏப்ரல் 30, பிற்பகல் 3 மணிக்கு நடக்கவிருக்கிறது. திரு. சேகர் சந்திரசேகர் இயக்கும் இந்த நாடகத்தில் சிகாகோ நகரின் நடிக, நடிகையர் பங்கேற்கிறார்கள். 11ம் நூற்றாண்டில் வாழ்ந்து, சமூகத்தில் நலிவுற்றவரிடமும் ஆன்மிகத்தைக் கொண்டு சென்று, பாரதமெங்கும் ஸ்ரீவைணவத்தைப் பரப்பி, தனியொருவராக கோயில் மேலாண்மையை ஒழுங்குபடுத்திய பகவத் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நாடகம் சித்திரிக்கிறது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்.
லதா ஆழ்வார், சிகாகோ, இல்லினாய்ஸ் |