மகளிர் மட்டும்


பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் 'மகளிர் மட்டும்' படத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா மையப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாசர், லிவிங்ஸ்டன், கோகுல்நாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் பிரம்மா. இவர் ஏற்கனவே 'குற்றம் கடிதல்' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். இப்படத்திற்காக புல்லட், ஜீப் எல்லாம் ஓட்டிப் பழகியிருக்கிறாராம் ஜோதிகா.

அரவிந்த்

© TamilOnline.com