ஓடி ஓடி உழைக்கணும்


சந்தானம் நாயகனாக நடிக்கும் 'படம் ஓடி ஓடி உழைக்கணும்'. நாயகியாக அமைரா தஸ்தர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி, மன்சூரலிகான், மயில்சாமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனத்தை ஞானகிரி எழுத, கே.எஸ். மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் இது என்பதைச் சொல்லத் தேவையில்லை. படத்தில் சந்தானம் முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com