மார்ச் 'தென்றல்' இதழில் எழுத்தாளர் பா. விசாலம் அவர்களைப் பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். மண்வாசனை மணக்கும் அவரது கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி
பெற்றவரும், தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிக் கொண்டிருப்பவருமான கவிப்பெருஞ்சுடர் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. 'மகாசக்தி ஸ்ரீ அன்னை' பற்றிய
விவரங்களைப் படித்து மகிழ்ந்தேன். திருக்குறளும் இங்கு மிகச்சிறப்பாக வளர்வது 'குறள் இளவரசி சீதா ராமசாமி' போன்ற இளவயதினரின் ஆற்றலைக் கொண்டு தெரிந்துகொள்ள முடிகின்றது.
சசிரேகா சம்பத், யூனியன்சிட்டி, கலிஃபோர்னியா
*****
தென்றலில் நான் முதலில் படிப்பது 'அன்புள்ள சிநேகிதியே' தான். அதில் பிரச்சனைக்கான தீர்வை டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் சொல்லும் விதம் அருமை. மற்றப் பத்திரிக்கைகளில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று
சொல்வார்கள். ஆனால் தென்றலில் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் விதத்தில் அமைவது பாராட்டத்தக்கது.
தெய்வானை, நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர்
*****
மாணவி சீதா ராமசாமியின் திருக்குறள் சாதனை பாராட்டுக்குரியது. அவர் 'குறள் இளவரசி' பட்டம் பெற்றதில் வியப்பில்லை. அவரது பெற்றோர் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். ஒவ்வொரு தென்றல் இதழின் சாதனையாளர்
பக்கமும் சிறப்பு.
கே. ராகவன், பெங்களூரு, இந்தியா |