தேவையான பொருட்கள் சேமியா - 200 கிராம் உருளைக்கிழங்கு (வேகவைத்தது) - 3 மைதா - 1/4 கிண்ணம் வெங்காயம் - 5 எலுமிச்சம்பழம் - 1 இஞ்சி - 1 துண்டு பச்சைமிளகாய் - 8 கரம்மசாலா - 2 தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை மூன்று கிண்ணம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பு, 1/2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் விட்டு, சேமியாவைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, வடிகட்டியில் தனியாக வைத்துக்கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியை நன்றாக அரைக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை, மைதாவுடன் உப்புச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். உருளைக்கிழங்கு மசியலில் வேகவைத்த சேமியா, அரைத்த மிளகாய், கரம்மசாலா பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து கட்லெட் வடிவத்தில் செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் கட்லெட்டைப் போட்டுச் சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் செந்நிறமாக ஆனதும் எடுக்கவும்.
வசந்தா வீரராகவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |