ஃபிப்ரவரி 18, 2017 அன்று விபா-சிகாகோ செயல்மையம் (Vibha-Chicago Action Center) 'Feed My Starving Children' என்ற பொதுச்சேவை நிகழ்வை நடத்தியது. அதில் விபாவைச் சேர்ந்த 53 தன்னார்வலர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர். இந்தச் சேவையில் வறிய, வலுக்குறைந்த குழந்தைகளுக்கான பிரத்தியேக சத்துணவை அளந்து பையில் நிரப்பிக் கொடுத்தார்கள். இதில் 518 குழந்தைகளுக்கு உணவு தரப்பட்டது.
விபாவின் முக்கிய நோக்கம் குழந்தைநலம் பேணுதல். இந்த நிகழ்வு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சேவையில் கிடைக்கும் இன்பத்தை அறியச்செய்து, அதில் ஆர்வத்தைத் துண்டுவதாக அமைந்தது. ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்ட விபா ஒரு லாபநோக்கற்ற அமைப்பு. இந்தியா மற்றும் அமெரிக்காவில் குழந்தைநலச் சேவைகள் பலவற்றைச் செய்துவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் வித்யாரம்பம் மற்றும் சில கல்வி அமைப்புகள் விபாவின் ஆதரவுடன் எழைக் குழந்தைகள், மீனவக் குழந்தைகள் மற்றும் கிராமக் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் பங்களித்து வருகின்றன.
விபாவுடன் சேவையில் இணைய விரும்புவோர் பார்க்க வேண்டிய இணையதளம்: www.Vibha.org
ப்ரியா பாலசந்திரன், சிகாகோ |