சங்கிலி புங்கிலி கதவ தொற


எம்.ஆர்.ராதாவின் பேரனும், இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளருமான ஹைக், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜீவா நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா, கோவை சரளா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட முன்னணி நடிக, நடிகையர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குநர், "மற்ற எல்லா திகில் கலந்த நகைச்சுவை படங்களில் இருந்தும் எங்கள் படம் வித்தியாசமானதாக இருக்கும். குடும்பங்கள் ரசிக்கக் கூடியதாக இதை உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com