சத்ரியன்


விக்ரம் பிரபு நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடிக்கும் படம் சத்ரியன். குணா என்னும் கேங்ஸ்டாராக நடிக்கிறார் விக்ரம் பிரபு. எஸ்.ஆர். பிரபாகரன் இப்படத்தை இயக்குகிறார். "தமிழ் சினிமா இதுநாள்வரை காட்டிவந்த கேங்ஸ்டராக படத்தின் நாயகன் குணா இருக்க மாட்டான். திரையில் விக்ரம் பிரபு எனும் நாயகன் கண்டிப்பாகத் தெரியமாட்டான். நம்ம ஊரோட தன்மை, கலாசாரம், பழக்கவழக்கம், வாழ்வியல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சினிமாத்தனமற்ற குணாவாகவே விக்ரம் பிரபு வாழ்ந்துள்ளார். விக்ரம் பிரபுவை ஆக்‌ஷன் ஹீரோவா நம்ம மனசுல பதியவைக்கிற படமா சத்ரியன் இருக்கும்" என்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு வீரப் பிரபு ஆகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com