கணிதப்புதிர்கள்
1. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
1, 1, 4, 8, 9, ....?

2. ஒரு பெட்டியில் முழுக்கட்டி, முக்கால் கட்டி, அரைக்கட்டி, கால் கட்டி என மொத்தம் 40 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றைத் தனது மகன்கள் மூவருக்கும் கட்டிகளை வெட்டாமல், உடைக்காமல் சரி சமமாகப் பிரித்துக்

கொடுத்தார் தந்தை. அவர், அவற்றை எப்படிப் பிரித்துக் கொடுத்திருப்பார்?

3. பத்மாவின் வயதையும் அவள் மகள் சித்ராவின் வயதையும் கூட்டினால் மொத்தம் 66 வருகிறது. தாயினுடைய வயதின் தலைகீழ் எண் தான் மகளின் வயது என்றால் தாயின் வயது என்ன, மகளின் வயது என்ன?

4. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
1, 8, 81, ....?

5. 50, 65, 85, ....., ....., 153 விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com