சேமியா உளுந்தோரை
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பால் - 1 கரண்டி
சர்க்கரை - 1 1/2 மேசைக்கரண்டி
கொப்பரை - 75 கிராம்
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 50 .மி.லி

செய்முறை
சேமியாவைச் சிறிது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து, தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு, கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து நைசாகப் பொடிசெய்யவும். வாணலியில் எண்ணெய்/நெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பால், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் சேமியா, முன்னர் செய்த உளுத்தம்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். சூப்பர் உளுந்தோரை ரெடி!

வசந்தா வீரராகவன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com