எத்தன தப்புதான் செஞ்சாலும் அன்பை மட்டுமே வாரித்தந்த அம்மா பாசத்தைப் பக்குவமா சொல்லத் தெரியாம கோவத்துக்குள்ள புதைச்சு வச்ச அப்பா வீட்டுக்குள்ள முதல் அழகிய தோழியாய் கண்டிப்புடன் பாசம் காட்டிய அக்கா அளவான வீட்டில்அன்பு இணைப்பாய் காலைச்சுற்றும் செல்ல நாய்க்குட்டி ஒன்றுகூடி மகிழ்ந்த நண்பர் கூட்டம் அக்கறையுடன் பழகிய அக்கம்பக்கம் நான் கைகூப்பி வணங்கிய குலதெய்வம் என் காவலுக்கு நின்ன எல்லைச்சாமி என எல்லோருக்கும் நன்றி சொல்லி சொந்த மண்ணில் விட்டுவிட்டு பொழப்பத் தேடி கடல்தாண்டி வந்து நாட்கள் நகருது புதுவிதமா கொஞ்சம் நெஞ்சு கனத்தாலும் இந்த வாழ்க்கையும் இருக்கு புதுசுகமா!
லாவண்யா சரவணன், வர்ஜீனியா |