மே 2007 : குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. ஆன்மீகர்கள் வாழுமிடத்தில் வலி கஷ்டம் (5)
6. சரியும் விற்பனையில் குறைத்து சொல்லிக்கொடு (4)
7. பணமும் அறிவும் பெற்ற ஒருவன் மனைவி (4)
8. கெட்டி மேளத்துக்கு முன் ராமேஸ்வரத்திலேயே ஆரம்பித்தும் அங்கேயே முடியலாம் (2,4)
13. மாளிகை மாடு அடிக்கு நிலைகுலைந்தது (6)
14. வெளியே இல்லாமல் முதல் கடவுளை அப்புறப்படுத்து (4)
15. சங்கடப் பார்வையில் ஒரு கல் (4)
16. நிறைவுபெறா மன்னன் சூடுவது ஒரு தின்பண்டமா? (5)

நெடுக்காக

1. திருவள்ளுவருக்கு வெகுளிப்பெண் (5)
2. மரியாதை இல்லாத பெண்ணே, சிதம்பரமா? ஊஹ¥ம், “வள்ளியூர்”! (5)
4. ஒரு திங்கள் பாதி வாசித்த பின் மூப்பின் அடையாளம் (4)
5. திகில் கதையில் விளங்காத அம்சம் (4)
9. நீர் சூழ்ந்திருக்க ஏசு (3)
10. இதைப் பற்றிய கேள்வி விடைபெறுவதற்கு உகந்ததல்ல என்பர் (5)
11. அரை அடி புதைந்த ஒரு கனியில் நிறைய கற்றவர் (5)
12. கொள்ளையர் பயன்படுத்துவது வெட்கப்படுபவர்க்கும் பயன்படலாம் (4)
13. பல மலைவாழிடங்களுக்குச் சேனை தொடர வெட்டு (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

© TamilOnline.com