பச்சைப்பட்டாணி வடை
தேவையான பொருட்கள்
பச்சைப்பட்டாணி - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
வற்றல்மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
வெங்காயம் (தேவைப்பட்டால்) - சிறிதளவு

செய்முறை
பட்டாணி காய்ந்ததாக இருந்தால் ஆறுமணி நேரமாவது ஊறப்போடவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஊறவைத்து, தேங்காய், மிளகாய்கள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை பொடியாய் நறுக்கிச் சேர்த்துப் பிசையவும். எண்ணெய் காய்ந்தவுடன் வடைகளைத் தட்டி மொறுமொறுப்பாக எடுக்கவும். இது மிகவும் சுவையான வடை. நிறம் பச்சையாய் இருந்தாலும் சுவைமிக்கது. தேவைப்பட்டால் வெங்காயம் சேர்த்துச் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com