சஹஸ்ராப்தி - சமத்துவத்தின் கீதம்
நவம்பர் 19, 2016 டாலஸ் நகரத்தில் இராமாநுசர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி, JETUSA வின் 'சஹஸ்ராப்தி என்கிற சமத்துவத்தின் கீதம்' என்னும் நிகழ்ச்சி ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, ஸ்ரீ அஹோபில ஜீயர் சுவாமி தலைமையில் பிரம்மாண்டமாக நடந்தேறியது. இதில் 3600 பக்தர்களும், 1600 இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர்.

பல்வேறு அமைப்புகளும், இசை மற்றும் நாட்டியப் பள்ளிகளும் ஒன்றிணைந்து இதனைப் படைத்தனர். ராகாஞ்சலி (சஹஸ்ரகலார்ச்சனா), ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் (ஆவதானம்),

ஸ்ரீ இராமாநுசர் (நாட்டிய நாடகம்), சின்ன ஜீயர் ஸ்வாமியின் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட்டம் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமிகள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஸ்ரீ இராமாநுசரின் பெருமைகளையும், ஆண்டவனின் அருளைப்பெறுவதில் அனைவரும் சமம் என்கிற சமத்துவக் கொள்கையையும் பரப்புகிறார்கள்.

2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் 29ம் தேதிவரை 3 நாட்கள் ஹூஸ்டன் விஜயத்துக்குப் பின், தமது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரதம் திரும்புவார்.

மேலும் விவரங்களுக்கு
www.chinnajeeyar.guru
www.statueofequality.org

ஜகன்னாதன்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com