TNF தெற்கு ஃப்ளோரிடா: ஈகை விருந்து
ஃபிப்ரவரி 11, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் தெற்கு ஃப்ளோரிடா கிளை, காதலர் தினத்தை ஈகை விருந்துடன் டேமராக் நகரில் (Tamarac Community center, 8604 West commercial Blvd., Tamarac, Florida 33351) கொண்டாட இருக்கிறது. ஆடல், பாடல், விருந்து மட்டுமின்றி அறக்கட்டளையின் கல்வி மற்றும் சமுதாயத் திட்டங்கள் பற்றிய சிற்றுரைகளும் விழாவின் முக்கிய அம்சமாகும் என்கிறார் கிளைத் தலைவர் திருமதி மாலதி பழநியப்பா. போர்ட் லாடர்டேல் மற்றும் தெற்கு ஃப்ளோரிடா வாழ் தமிழர்கள் தமிழகத்திற்கு உதவவும், குழந்தைகள் தமிழகத்தில் சேவை செய்வதற்கான வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ளவும் இதுவோர் வாய்ப்பு என்கிறார் கிளையின் செயலர் வனிதா செல்வன்.

விழாவில் கலந்துகொள்ளவும், தமிழ்நாடு அறக்கட்டளையின் கல்வித் திட்டங்களுக்கு நன்கொடை வழங்கவும்:
மின்னஞ்சல்: TNF.SOUTHFLORIDA@GMAIL.COM
இணையதளம்: www.tnfusa.org/chapter/florida-south
தொலைபேசி: 954.304.2873

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com