நியூ யார்க் டைம்ஸின் நவம்பர் 16ம் தேதியிட்ட இதழைப் பார்த்ததும் எனக்கு 2014 ஜூன் தென்றல் இதழில் வெளியான அருணாசலம் முருகானந்தம் அவர்களது நேர்காணல் ஞாபகத்திற்கு வந்தது. வியாபார நோக்கமில்லாமல் பெண்கள் நலத்திற்காகவென்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் உழைப்பாளிகளை எப்படித்தான் கண்டுபிடித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி உண்டாக்குகிறீர்களோ! தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென எனக்குத் தெரியவில்லை.
பதினாறு வயதைத் தாண்டிய தென்றல் இதழ் மேலும் உயரப் புதுவருட வாழ்த்துக்கள்.
கமலா சுந்தர், ப்ரின்ஸ்டன் ஜங்ஷன், நியூ ஜெர்ஸி
*****
டிசம்பர் இதழின் நேர்காணல் 'பசுமைப்போராளி' ரேவதி மிகவும் நன்றாக இருந்தது. அவரின் விவசாயிகளுக்காகச் செய்யும் சேவை மிகவும் பாராட்டத்துக்குரியது. ஒவ்வொரு இதழின் நேர்காணல்கள் மற்றும் இதர பகுதிகள். அருமை. தென்றலின் சுகமான காற்று வரும் புது வருடம் மட்டும் அல்லாமல் பல வருடங்கள் அழகாக வீசட்டும் என்று ஆசிரியர் குழு மற்றும் இந்தப் பணியில் பங்குகொள்ளும் அனைவர்க்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கே. ராகவன், பெங்களூரு, இந்தியா |