தெரியும்; ஆனா தெரியாது


"தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபார்க்கும் கபிலன், சில பிரச்சனைகளின் மன உளைச்சலிலிருந்து விடுபடத் தன் தோழி, நண்பர்களுடன் மலைப் பிரதேசத்திற்கு வருகிறான். ஜாலியாகக் காட்டில் மூலிகை மதுவைக் குடிக்கிறார்கள். போதையில் நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட, கபிலன் கொல்லப்படுகிறான். பயந்துபோய் மலை அடிவாரத்திற்கு வரும் கபிலனின் நண்பர்களுக்குக் கபிலனிடமிருந்து போன் வர அதிர்ந்து போகிறார்கள். கபிலன் உயிரோடு இருப்பதும், ஒரு விபரீதத்தில் சிக்கியிருப்பதும் தெரியவந்து அவனைக் காப்பாற்றச் செல்கிறார்கள். கபிலனுக்கு என்ன சிக்கல், அதிலிருந்து மீண்டானா என்பதைச் சொல்கிறது 'தெரியும்; ஆனா தெரியாது'. சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தியா நாயர் அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் பயில்வான் ரங்கநாதன், ராஜேஷ், சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையில். எழுதி இயக்குகிறார் யாழ்குணா. கதையே கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு.

அரவிந்த்

© TamilOnline.com