கதிர்


விஷ்வா, நீரஜா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் கதிர். கஞ்சா கருப்பு, செந்தி, சிந்து, சங்கவி முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். சர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் முக்கியவேடத்தில் நடிக்கிறார். அண்ணாமலை, கபிலன் ஆகியோரின் பாடல்களுக்கு செளந்தர்யன் இசையமைக்கிறார். பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தோழர் அரங்கன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் + காதல் + சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது இப்படம். சமூக அக்கறையோடு வாழும் இளைஞனின் வாழ்வில் காதல் கடந்துபோனால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com