முந்தல்


நாயகனாக அப்பு கிருஷ்ணாவும், நாயகியாக ருக்‌ஷாவும் அறிமுகமாகும் படம் முந்தல். முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், அழகு, 'மகாநதி' சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் நடிக்கின்றனர். அண்ணாமலை, வெ. மதன்குமார், தர்மபுத்திரன் பாடல்களை எழுத கே. ஜெய்கிருஷ் இசையமைக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இப்படத்தின்மூலம் இயக்குநராகிறார். "புற்றுநோயைக் குணப்படுத்தும் சித்தமருந்துத் தயாரிப்புக்கான ஃபார்முலா ஓர் ஓலைச்சுவடியில் இருக்கிறது. ஆனால், அந்த ஓலைச்சுவடி கம்போடியாவில் பெரும் பாதுகாப்புக்கிடையே உள்ளது. அதனை நாயகன் தேடிச் செல்கிறார். அதைக் கைப்பற்ற மேலும் பலரும் கிளம்பிச் செல்கின்றனர். யாரிடம் ஓலைச்சுவடி கிடைத்தது, என்ன செய்தார்கள், என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் ஜெயந்த்.

அரவிந்த்

© TamilOnline.com