மரகத நாணயம்


ஆதி - நிக்கி கல்ராணி நாயக, நாயகியாக நடிக்கும் படம் மரகத நாணயம். முக்கிய வேடங்களில் ஆனந்தராஜ், கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி, காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி நடிக்கின்றனர். திபு நைனன் தாமஸ் இசையமைக்கிறார். "இதுவொரு ஃபேன்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. அந்த நாணயத்துக்குள் அதிர்ஷ்டம், அமானுஷ்யம் எல்லாமும் அடங்கியிருக்கிறது. ஹீரோ ஆதி டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகின்றன. அது யார் கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்" என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவண். படத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com