தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017ம் ஆண்டு மாநாடு ஓஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் மாநகரில் மே, 27-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் TNF திட்டங்களுக்கு நிதி திரட்டும் விழாக்களாக TNF மாநாடுகள் இயங்கிவருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே கொலம்பஸ் மாநாடு அமையும் என்கிறார் TNF இயக்குநர் மணிவண்ணன் பெரியகருப்பன். கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் 'சங்கம் முதல் சிலிகான் வேலிவரை' என்ற கலை இலக்கிய நிகழ்ச்சி உள்பட பல தரமான நிகழ்ச்சிகளை மாநாட்டுக்குழு ஏற்பாடு செய்து வருவதாக TNF சென்ட்ரல் ஓஹையோ கிளைத்தலைவர் ஆனந்த் பத்மநாபன் அறிவித்துள்ளார். மாநாட்டில் திரட்டப்பட்டும் நிதி, அறக்கட்டளையின் ABC கல்வித் திட்டம் வாயிலாக ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்கிறார் தலைவர் சிவசைலம்.
மாநாட்டில் பங்கேற்கவும், மேல் விவரங்களுக்கும், மின்னஞ்சல்: tnf.centralohio@gmail.com இணையம்: www.tnfusa.org தொலைபேசி: 614.353.8268
செய்திக்குறிப்பிலிருந்து |