செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
சான் ஹோசே கன்ட்ரி லேன் பள்ளியின் நான்காம் நிலை பயிலும் பிரணவ் சாயிராம், அவரது வகுப்புக்கான கலிஃபோர்னியா மாநில செஸ் சேம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் 40 போட்டியாளர்களுக்கு எதிராக விளையாடிய பிரணவ், இரண்டு நாட்களில் 6 சுற்றுக்களில் விளையாடிச் சேம்பியன்ஷிப் வென்றார். இந்த வெற்றிக்குப் பின் அமெரிக்க அளவில் அவர் 9 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட 50 சிறந்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இவரது முந்தைய சாதனைகள் குறித்து அறியப் பார்க்கத் தென்றல், ஃபிப்ரவரி 2016

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com