இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு
தேவையான பொருட்கள்

இஞ்சி (தோல் சீவி
நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பச்சைமிளகாய்
நறுக்கியது - 1/2 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
வெல்லத் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ந. எண்ணெய் - 1/2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்துக் கொள்ளவும். விழுதைப் போட்டு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, இவற்றைப் போட்டுக் கிளறும் போது தேவையானால் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். நன்றாகச் சுருண்டு வரும் போது இறக்கிவிடவும். இதை இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com