தக்காளித் தொக்கு
தேவையான பொருட்கள்

தக்காளிப் பழம் - 8
புளி - பாதி எலுமிச்சம் பழம் அளவு
மிளகாய்ப் பொடி - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
ந. எண்ணெய் - 3/4 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை

வெறும் வாணலியில் வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து எடுத்து வைக்கவும். தக்காளிப் பழத்தை நறுக்கி உப்பும் புளியும் கலந்து தாம்பாளத்தில் பரவலாக வைத்து வெயிலில் காய வைக்கவும். கலகலவென்று நீர் சுண்டிக் காய்ந்ததும் மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த விழுதைப் போட்டுக் கிளறவும். சிறிது நேரம் கழித்து மஞ்சள் பொடி போடவும். நன்றாக வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளி விழுதில் பொடி செய்து வைத்திருக்கும் வெந்தயத்தைப் போட்டு நன்றாகக் கிளறவும். சுருண்டு வரும் போது இறக்கி வைக்கவும். இதை வருடத்துக்கும் செய்து வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com