அக்டோபர் 15, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்பியா கிளை, வருடாந்திர ஈகை விழாவைக் கொண்டாடியது. விஜய் தொலைக்காட்சி புகழ் 'சூப்பர் சிங்கர்ஸ்' சாய் சரண், சௌமியா, அரவிந்த் முகுந்தன், பாடகி உஷாராஜ், கலைஞர் அமுதவாணன் ஆகியோரின் இசை மற்றும் பல்சுவை நிகழ்ச்சி கொடையாளர்களை மகிழ்வித்தது.
விழாவில் திரட்டப்பட்ட 20,000 டாலருக்கும் அதிகமான தொகை, தமிழகக் கிராமப்புறங்களில் TNF செயல்படுத்தி வரும் ABC கல்வித்திட்டத்திற்கும், சீர்காழியில் அன்பாலயம் அமைப்பில் வளர்ந்துவரும் மனவளர்ச்சிகுன்றிய சிறப்புக் குழந்தைகளின் வாழ்விற்கும் பயன்படுத்தப்படுமென TNF ஃபிலடெல்பியா கிளையின் தலைவர் சின்னா சின்னக்கருப்பன் அறிவித்தார். TNF வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் ABC கல்வித்திட்டத்தின் வளர்ச்சி குறித்து துணைத்தலைவர் முனைவர் சோமலெ. சோமசுந்தரம் உரையாற்றினார்.
TNF இன்டர்ன்ஷிப் மூலம் தமிழகத்தில் கோடையில் சேவைசெய்த அனன்யா ராமநாதன், கிருஷ்ணா சுரேஷ், ஆதேஷ் அருள், ஆஷ்னா அருள், அரவிந்த் காமேஸ்வரன், கீர்த்தனா ராவ், சஹானா ராவ் ஆகிய இளையோருக்கும், TNF திட்டங்களுக்கு நிதிதிரட்ட ஆர்வம் காட்டிய பள்ளி மாணவியர் அபிராமி முருகதாஸ் மற்றும் ப்ரீத்தி கிருஷ்ணமணிக்கும் Shining Star விருதுகளை திருமதி. இந்திரா விஸ்வநாதனும், முனைவர் காந்தி செல்வவரதனும் வழங்கினர். ஃபிலெடெல்பியா கிளைக்குப் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வருகிற ஜெயா துரைசாமி முருகதாஸ் குடும்பத்தினருக்கு மருத்துவர் நிர்மலா செந்தில்நாதன் நினைவுப்பரிசு அளித்துக் கௌரவித்தார்.
தன்னலமின்றிச் சேவைசெய்தும், நிதி கொடுத்தும் இருநூறு குடும்பங்கள் தொடர்ந்து ஆதரிப்பது TNF ஈகை விழாவின் வளர்ச்சிக்கான சான்றுகள் என்கிறார் கிளைச்செயலர் ரஞ்சனி மகாதேவன்.
மேலும் விவரங்களுக்கு: வலைமனை: TNFUSA.ORG/CHAPTER/PHILADELPHIA, மின்னஞ்சல்: phillrtnfchapter@gmail.com
பார்வதி சண்முகம், டவுனிங் டவுன் |