டெக்சஸ்: தமிழ் ஆசிரியர் பயிற்சி முகாம்
அக்டோபர் 22, 2016 அன்று, ஆஸ்டினில் உள்ள டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரா. டாக்டர். ராதாகிருஷ்ணன் சங்கரன், இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமில், மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு தமிழ் கற்றுத் தருவது என்று விளக்கப்பட்டது.

அமெரிக்கத் தமிழ் மாணவர்கள் தமிழில் புலமை பெறும் அளவுக்கு, நாம் கற்பித்து தர முடியும். எளிதில் புரிந்துகொண்டு, நினைவில் நிறுத்திக்கொள்ளும் பயிற்சி முறைகளைக் கையாள வேண்டும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களின் ஒலி மாணவர்களுக்கு அதிகம் கேட்குமாறு செய்யவேண்டும்.

பயிற்சி முகாமில் 40க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் பங்கேற்றனர். திரு. வேலு ராமன் வரவேற்று, பயிற்சி முகாமின் நோக்கத்தை எடுத்ததுரைத்தார். தமிழ்ப் பள்ளி தாளாளர் திருமதி. விசாலாட்சி வேலு, ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளிச் செயலாளர் திரு. ஸ்ரீராம் கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com