நவம்பர் 12, 2016 அன்று விரிகுடாப்பகுதி தமிழ் கத்தோலிக்க சமூகத்தினர் (Bay Area Tamil Catholic Community) தமது 13வது ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர். 2003ம் ஆண்டு துவங்கிய இந்தச் சமூகம் இதனைச் சங்கமம் திருவிழாவாக ஆண்டுதோறும் உற்றார், உறவினர், நண்பர்கள் என ஒரு குடும்பமாய்க் கூடிக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை அன்று தமிழ் திருப்பலிக்காய் St. Joseph's Parish மௌன்டன் வியூவில் தமிழ் கத்தோலிக்கர்கள் கூடுகிறார்கள். அருட்பணி. கென்னடி சே.ச. அவர்கள் தலைமையில் பத்து திருப்பணியாளர்களுடன் தமிழ் திருப்பலி 6:30 மணிக்குத் துவங்கியது. விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சான்ட க்ளாரா தலைவர் அருட்பணி. மைக்கல் எங்கிள் அவர்கள் பங்கேற்று, வாழ்த்தும், நல்லாசீரும் வழங்கினார். குழுவின் ஆன்மீக வழிகாட்டி அருட்பணி. கிறிஸ்டி ஆரோக்கியராஜ் அவர்கள் இக்குழுவின் வளர்ச்சிக்காகவும், விழா சிறக்கவும் உழைத்த, தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டி, திருப்பணியாளர்களுக்கு நன்றிகூறி சங்கமத் திருவிழா நினைவுப் பரிசுகளை வழங்கினார்..
சிறார்முதல் பெரியவர்வரை பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன. ஆடல், பாடல், நாடகம், நாட்டியம் மற்றும் பல்வேறு நகைச்சுவை நிகழ்வுகளில் திறமை காண்பித்தோர் அனைவருக்கும் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.
வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் மாதந்தோறும் நடைபெறும் திருப்பலி நிகழ்வுகள் பற்றி அறிய: www.TamilCatholic.org.
அருட்பணி. கிறிஸ்டி ஆரோக்கியராஜ் |