வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா
வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 17, 2016 தொடங்கி உலகத்தமிழ் இயக்கங்களும், பல்கலைக்கழகங்களும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.

உலகத்தமிழ் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மகன் பொறிஞர். தமிழ்மணிகண்டன் முயற்சியால் நவம்பர் 19, 2016 அன்று அமெரிக்காவில் மேரிலாண்டு மாகாணத்தில் ஹாலிடே இன் வளாகத்தில் இவ்விழா சிறப்புற நடைபெற்றது.

பன்னாட்டுப் புறநானூற்றுக் குழுத்தலைவர் முனைவர். பிரபாகரன் தலைமை வகித்தார். வ.சுப.வின் மாணவரும் தொழிலதிபரும் கல்வியாளருமான பழனி. ஜி. பெரியசாமி அவர்கள் முன்னிலையில் தொடங்கிய விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாஷிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் பரிவிளாகம். சா. பார்த்தசாரதி, துணைத்தலைவர் குழந்தை இராமசாமி, முன்னாள் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி, மருத்துவர் சோம இளங்கோவன், முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகியோர் உரையாற்றினர். வ.சுப.வின் மகள் தென்றல் அழகப்பன் நெகிழ்வுரையாற்றினார். வா.மு.சே.வின் புதல்வர்கள் ஆண்டவர் மற்றும் தமிழ்மணிகண்டன் எழுதிய 'வ.சுப. எனும் தமிழ்க்கடல்' நூல் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடாக வெளியானது.

வ.சுப.வின் தமிழ்த்தொண்டு, ஈகை, தற்சிந்தனைகள், நிர்வாகத்திறன், தனிமனித ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும் உரையரங்கமும் நடைபெற்றன. திரு. அரசு செல்லையா, திரு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், திரு. சோமலெ. சோமசுந்தரம், திரு. ஞானசேகரன் இராசமாணிக்கம், திரு. மகேந்திரன் பெரியசாமி, திரு. சுப்பிரமணிய முனியசாமி, திரு. பஞ்சாட்சரம் வைத்தியலிங்கம், நெல்லிக்கனி அழகப்பன் ஆகியோர் உரையாற்றினர். மாணிக்கனாரின் தமிழ்க்கல்வி என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பள்ளிக்குழந்தைகள் திருக்குறளும் மாணிக்கக்குறளும் ஒப்புவித்தனர்.

நெல்லிக்கனி அழகப்பன்,
மேரிலாண்டு

© TamilOnline.com